Wednesday, October 24, 2007

கம்யூனிசம்: ஒரு பகிரங்க விவாதம்

கம்யூனிசம் மட்டுமே உழைக்கும் மக்களின் விடுதலைக்கான ஒரே தீர்வு

முதலாளித்துவத்தின் சுரண்டலில் இருந்து மக்களை விடுவிக்க வல்ல ஒரே பாதை கம்யூனிசப் பாதை மட்டுமே. சோசலிசம் (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்) என்பது கம்யூனிசத்தை நோக்கிய முதல் சமூக கட்டுமானம்.சோசலிச சமூகத்தில் அனைவரும் உழைக்க வேண்டும், சமூக வளர்சிக்கு ஒவ்வொருவரும் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கிறது. முதலாளிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் அவர்களும் உழைத்தே ஆக வேண்டும், உழைக்காமல் வாழ முடியாது. சோசலிச சமுதாயத்தில் சுரண்டல் ஒழிக்கப்படுகிறது. சோசலிச உற்பத்தி மக்களின் தேவைக்கேற்ப இருக்கும், முதலாளித்துவ உற்பத்தி லாபத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கிறது. உண்மையான மக்களாட்சி சோசலிச சமூகத்தில் மட்டுமே சாத்தியம். வலைப்பூவில் சிலர் கம்யூனிசம் தேல்வி அடைந்து விட்டதாக எழுதியதை வாசிக்க நேர்ந்தது, ஆதலால் இந்த பதிவை எழுத வேண்டிய சூழலில் உள்ளேன்.சீனாவிலும், ரஷ்யாவிலும் கம்யூனிசம் தோல்வியடைந்து விட்டதா? இது ஒரு பின்னடைவு மட்டுமே. லெனின் இதுபற்றி கூறுகையில் ரஷ்யாவை சுற்றி அனைத்து நாடுகளிலும் முதலாளித்துவம் உள்ளது, ஆகையால் சோசலிசம் எப்போதும் அழிக்கப்படலாம் என்கிறார். அதற்கேற்றவாறு அமெரிககா போன்ற 14 முதலாளித்துவ நாடுகள் அதன் மீது போர் தொடுத்தன அதை ரஷ்யா எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இராணுவ ரீதியில் வெல்ல முடியாத இந்த நாடுகள் ரஷ்யா முழுவதும் உளவாளிகளை உடுருவ செய்தன, உளவாளிகள் கட்சியின் மத்திய கமிட்டி வரையிலும் உடுருவி இருந்தனர். ரஷ்ய மக்களின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் முயற்சியிலும் அந்த நாடுகள் ஈடுபட்டன. ஸ்டாலினுக்கு பிறகு வந்த குருஷேவ், கோர்பஷேவ் , எல்சின் முதலானவர்கள் மார்க்சின் தத்துவத்திற்கு நேரெதிராக முதலாளித்துவம் ஒழிந்துவிட்டதாக காரணம் கூறி வர்க்க போராட்டத்தை கைவிட்டனர், அவர்களின் தவறால் சோசலிசம் அங்கு பின்னடைவை சந்தித்தது. முதலாளித்துவ நாடுகளின் சோசலிசம் தகர்ந்துவிட்டதென்ற பொய் பிரச்சாரமும் ஒரு காரணம்.சோசலிச நாடுகளே இல்லையென்பதால் கம்யூனிசம் தோல்வியுற்றுவிடுமா? எப்போது சுரண்டலும், முதலாளித்துவம் ஒழிக்கப்படுகிறதோ அது வரை கம்யூனிசத்தின் தேவை இன்றியமையாததாகிறது. முதலாளித்துவத்தின் விதியான உழைப்புச் சுரண்டலும், ஏகாதிபத்தியமும் ஒழிக்கப்படும் வரை இந்த வர்க்கப் போராட்டம் ஓயாது. மார்க்ஸ் குறிப்பிட்டது போல முதலாளித்துவத்தில் ஏகாதிபத்தியங்கள் தனக்கு கீழே உள்ள காலனி நாடுகளையும், பெருமுதலாளிகள் சிறுமுதலாளிகளையும், சிறுமுதலாளிகள் உழைக்கும் மக்களையும் சுரண்டுகின்றனர், சுரண்டல் இல்லாமல் முதலாளித்துவம் இல்லை. சுரண்டப்படும் வர்க்கம் இதனை எதிர்த்து போராடுவது இயல்பே.தற்போதுள்ள சூழலில் நேரடியாக காலனியாதிக்கம் செய்ய முடியாத நிலையில் முதலாளித்துவ நாடுகள் காலனிய ஓப்பந்தங்கள், கலாச்சார சீரழிவுகளின் மூலம் தனது ஆதிக்கத்தை செலுத்துகின்றன. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்கள் மூன்றாம் உலக நாடுகளை இப்படிதான் மறுகாலனியாதிக்கத்தை நடைமுறை படுத்துகின்றன.முன் எப்போதும் இல்லாத அளவில் முதலாளித்துவ வர்கத்திற்கும் பாட்டாளி வர்கத்திற்குமான இடைவெளி அதிகரித்து உள்ளது, இது மக்களை சோசலிசத்தை நோக்கி செல்ல வழிவகுக்கிறது. மக்கள் சோசலிசம் நோக்கி திரண்டு போராடுவதை தடுக்கவே WSF, NGOs, ASF போன்ற அமைப்புகள் அமெரிக்காவால் உலகம் முழுவதும் நிறுவப்படுகிறது. இந்த அமைப்புகள் உழைப்பவர்களை ஒன்று படவிடாமல் பிரிக்கின்றன(தலித்துகள், பெண்கள் என்று தனித்தனியாக பிரிக்கின்றன). முதலாளித்துவத்தை வீழ்த்தாமல் உழைக்கும் மக்களை சுரண்டலில் இருந்து விடுவித்துக் கொள்ள முடியாது.


குறிப்பு : சுரண்டல் இல்லாமல் முதலாளித்துவம் இல்லை, முதலாளித்துவத்தை தூக்கியெறியாமல் சுரண்டலையும் வறுமையையும் ஒழிக்க முடியாது. இதை கம்யூனிசத்தால் மட்டுமே சாதிக்க முடியும். இதில் வேறு கருத்து உடையவர்களின் கேள்விகளுக்கு விடையளிக்க தயாராகவே இருக்கிறேன். உங்கள் மாற்று வழியுடன் விவாதிக்க தயாரா?

விவாதம் :

தமிழ்மணி said...

விவாதிக்கலாமே!எங்கே விவாதிக்கலாம்?

October 22, 2007 12:20 PM

ஆசாத் said...

இந்த வலைபூவில் கூட விவாதிக்கலாம்

October 22, 2007 9:46 PM

தமிழ்மணி said...

என் கேள்விகளை என் பதிவிலும் எழுதியிருக்கிறேன்உங்கள் பதிவிலும் எழுதுவேன்.

1) கம்யூனிஸ அமைப்பில் கார்கள் இருக்குமா?
October 23, 2007 5:32 AM

ஆசாத் said...

கார்கள் இருக்கும்

October 23, 2007 5:36 AM

தமிழ்மணி said...

கார்கள் இருக்கும் என்றால், கார்களை ஓட்ட சாலைகள் வேண்டும். கார்களை ஓட்ட சாலைகள் இருந்தால், கார்கள் இடது புறம் போகவேண்டுமா வலது புறம் போகவேண்டுமா என்பது போன்ற சட்டங்கள் இயற்றப்படவேண்டும். சட்டங்கள் இயற்றப்படவேண்டும் என்றால், யாராவது அவற்றை இயற்றவேண்டும். (மக்களோ மக்கள் பிரதிநிதிகளோ) இது சட்டசபையாக (எந்த வடிவத்திலோ) வந்துவிடும்.சாலைகள் இருந்தால் விபத்துகள் இருக்கும். விபத்துகள் இருந்தால், யாருடைய குற்றம் என்று விசாரிக்க நீதிமன்றம் வேண்டும். குற்றம் என்று வந்துவிட்டால் தண்டனை என்பதும் வேண்டும். தண்டனையை நிறைவேற்ற போலீஸ், ஜெயில் எல்லாம் வேண்டும்.கார் ரிப்பேர் ஆகிவிட்டால் கார் ரிப்பேர் பண்ண ஆள் வேண்டும். கார் மெக்கானிக் எல்லோரும் ஒரே மாதிரியான திறமை உடையவர்கள் அல்ல. ஒரு கார் மெக்கானிக்குக்கு மவுஸ் ஜாஸ்தி ஆகும். அவருக்கு ஏராளமாக வரும் ஆர்டரை எல்லாம் அவரே ரிப்பேர் பண்ண முடியாது. ஆனால், அவர்தான் ரிப்பேர் பண்ணவேண்டும் என்று மக்கள் கேட்டால், "எல்லோரும் எல்லாமும் பெறக்கூடிய கம்யூனிஸம்" எங்கே இருக்கும்?

October 23, 2007 7:13 AM

ஆசாத் said...

கம்யூனிச சமூகத்தில் நீங்கள் கூறும் சட்டம், நீதிமன்றம், போலிஸ் போன்ற ஒடுக்குமுறை கருவிகள் தானாகவே உதிர்ந்துவிடும். அரசின் அங்கங்களான சட்டம், நீதிமன்றம், போலிஸ் போன்றவை ஏதாவது ஒரு வர்கத்தை(முதலாளி, பாட்டாளி) ஒடுக்குவதற்காகவே தோற்றுவிக்கப்பட்டன. வர்கங்கள் ஒழிந்த பின்பே கம்யூனிசம் மலர்வதால் அவை தானாகவே உதிர்ந்து விடும். கம்யூனிசத்தை நோக்கிய முதல்படி சோசலிசம், அதுவே பாட்டாளி வர்க்க சர்வதிகாரமாகும். இந்த சமூக அமைப்பில் வர்க்க பேதங்கள் நீக்கப்பட்டு கம்யூனிச சமூகம் நிறுவப்படும். கார் ரிப்பேர் ஆகிவிட்டால், முறையான பயிற்சி அளிக்கப்பட்ட மெக்கானிக்குகள் இருக்கும் சோசலிச சமுகத்தில் ஒரே மெக்கானிக்கிடம் செல்ல வேண்டியிருக்காது. ஒவ்வொருவருடைய தனிச்சிறப்பை கண்டறிந்து, அந்த துறையிலேயே பயிற்சியளிக்கப்படுவதால் அனைவரும் சிறப்பாக செயல்படுவார்கள்.
October 23, 2007 8:37 AM

தமிழ்மணி said...

//கம்யூனிச சமூகத்தில் நீங்கள் கூறும் சட்டம், நீதிமன்றம், போலிஸ் போன்ற ஒடுக்குமுறை கருவிகள் தானாகவே உதிர்ந்துவிடும். //

கம்யூனிஸ அமைப்பில் சாலையில் விபத்துகள் நடந்தால் என்ன செய்வீர்கள்?
October 23, 2007 10:31 AM

தமிழ்மணி said...

ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்வோம். சாலைகளில் கார்கள் எப்படி செல்லவேண்டும் என்ற விதிமுறைகளை யார் வகுப்பார்கள்?மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், "மக்கள்" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்?
October 23, 2007 10:46 AM

ஆசாத் said...

தமிழ்மணி,நீங்கள் கேட்கும் கேள்வி கம்யூனிச சமூகத்திலா அல்லது சோசலிச சமுகத்திலா? இரண்டுக்குமான வேறுபாடுகளை அறிவீர்கள் என நினைக்கிறேன். எந்த சமூகத்தில் என்பதை உறுதிபடுத்துங்கள்
October 24, 2007 2:29 AM

தமிழ்மணி said...

நான் கேட்பது கம்யூனிஸ அமைப்பில்தான். சோசலிஸ அமைப்பில் அல்ல.கம்யூனிஸ அமைப்பில் சாலைகளில் கார்கள் எப்படி செல்லவேண்டும் என்ற விதிமுறைகளை யார் வகுப்பார்கள்?மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், "மக்கள்" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்?நன்றி
October 24, 2007 5:39 AM

ஆசாத் said...

சோசலிச சமுதாயத்தில் சாலை விதிமுறைகள் அனைத்தும் போக்குவரத்திற்கென்று உள்ள துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் நெறிப்படுத்தப்படுவர். மக்கள் சோசலிச சமுதாயத்தில் நன்கு பழக்கப்படுத்தப்பட்டிருப்பதால் அத்தகைய விதிமுறைகளின் தேவை இருக்காது. கம்யூனிசம் என்பது மிக உயர்ந்த விஞ்ஞான சமூக அமைப்பு.மக்களிடையே கருத்து வேறுபாடுகள் பெருமளவிற்கு இருக்காது. கருத்து வேறுபாடு என்பது வர்க்கம் சார்ந்தது. வர்கங்கள் ஒழிக்கப்பட்ட சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்காது.
October 24, 2007 6:14 AM


ஜமாலன் said...

தோழர் உங்கள் இறுதி பதிலை அவரது விவாதத்தில் விட்டுவிட்டார். //கம்யூனிஸ அமைப்பில் சாலைகளில் கார்கள் எப்படி செல்லவேண்டும் என்ற விதிமுறைகளை யார் வகுப்பார்கள்?மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், "மக்கள்" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்?//கம்யூனிஸ சமுகம் என்பது மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு சமூகம். அதில் இதுபோன்ற அபத்தமான விதிமுறை பிரச்சனைகள் எல்லாம் வராது. மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வது என்றால்.. அறங்களை ஒழுங்குகளை தாங்களே பயின்றவர்கள் அல்லது அதற்கான சிந்தனை முறைகளைக் கொண்டவர்கள் என்று பொருள். வர்க்க சமூகம்தான் இதுபோன்ற ஏற்றத்தாழ்வான பொருத்ததமற்ற சிந்தனைகளை உருவாக்கும். அரசற்ற புராதன சமூகங்களில் மனிதகுலம் வாழ்ந்து தழைத்ததால்தான் இன்று இங்கு வந்து நம்மால் மணி ஆட்ட முடிகிறது. அல்லது கடவுள் படைக்கம்போதே ஆரசன் அடிமை என்று இரண்ட மனிதனை படைத்திருக்க வேண்டும். ஏன் அவர் ஒன்ற படைத்தாராம்? அன்றே ஒருவரை ஒருவர் இன்றுபோல் காலை வாருவது உயர்வு தாழ்வு பார்ப்பது சுரண்டுவது என்கிற வர்க்க அமைப்பாக இருந்தால் குறைவான மக்களைக் கொண்ட அந்த சமூகம் ஒருவனை ஒருவன் அடித்துக் கொண்டு செத்திருக்கும். இப்ப யாரும் இங்கு வந்து அணாணியாகி ஜோக் அடித்துக் கொண்டு சைபீரியா என சல்லி அடித்துக் கொண்டிருக்க முடியாது. நன்றி.
October 24, 2007 6:49 AM

தமிழ்மணி said...

//சோசலிச சமுதாயத்தில் சாலை விதிமுறைகள் அனைத்தும் போக்குவரத்திற்கென்று உள்ள துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் நெறிப்படுத்தப்படுவர்.//

அப்படியே வைத்துக்கொள்வோம். அதாவது சோசலிஸ சமுதாயத்தில் உருவான விதிகளை தொடர்ந்து பின்பற்றுவீர்கள்.// மக்கள் சோசலிச சமுதாயத்தில் நன்கு பழக்கப்படுத்தப்பட்டிருப்பதால் அத்தகைய விதிமுறைகளின் தேவை இருக்காது. கம்யூனிசம் என்பது மிக உயர்ந்த விஞ்ஞான சமூக அமைப்பு.//

எந்த விதிமுறைகளின் தேவை இருக்காது? புதிய விதிமுறைகளின் தேவை இருக்காதா? பழைய விதிமுறைகளின் தேவை இருக்காதா? //மக்களிடையே கருத்து வேறுபாடுகள் பெருமளவிற்கு இருக்காது. கருத்து வேறுபாடு என்பது வர்க்கம் சார்ந்தது. வர்கங்கள் ஒழிக்கப்பட்ட சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்காது.//

கருத்துவேறுபாடு இல்லாத மக்களா? ஒரு முதியவருக்கு 30 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் சாலையில் வண்டிகள் ஓட்டக்கூடாது என்று தோன்றலாம். ஒரு இளையவருக்கு 90 கிலோமீட்டருக்கு மேல் வண்டிகள் ஓட்டலாம் என்று தோன்றலாம். இதற்கும் வர்க்கத்துக்கும் என்ன சம்பந்தம்?
October 24, 2007 7:06 AM

தமிழ்மணி said...
நன்றி ஜமாலன்,இல்லையே. அவரது பதிலையும் எழுதி அதற்கு என் பதிலும் எழுதியுள்ளேனே?

நன்றி


செம்பியன் பரிதி said...

எனக்கும் சில கேள்விகள் உள்ளது

1,நீங்கள் இந்தியாவை எப்படி பார்க்கிறீர்கள் ?

2,இந்தியாவில் எப்படி புரட்சி செய்வீர்கள் ?

3,மருதையன் பார்ப்பன கண்ணோட்டத்தில் இல்லை என்பதை எப்படி நம்புவது ?

4,உங்கள் அமைப்பிலுள்ள முக்கிய நபர்கள் அனைவருமே பார்ப்பனர்களாகஇருக்கும் போது நீங்கள் தமிழர்களின் விடுதலையை பற்றி பேசுவதை எப்படி நம்புவது ?

5,தமிழ் தேசிய இனம் பற்றி உங்கள் கருத்து என்ன ?என்னுடைய கேள்விகள் உங்கள் மனதை புன்படுத்தும் நோக்கமுடையன அல்ல எனது அய்யங்களை தெளிவு படுத்திக்கொள்ளவே இவற்றை முன் வைத்துள்ளேன் இன்னும் பலகேள்விகள் உள்ளது தொடர்ந்து விவாதிப்போம்.

நன்றிசெம்பியன் பரிதி

October 24, 2007 8:14 AM

பாவெல் said...

தமிழ்மணி கம்யூனிசத்தை தர்க்க அடிப்படையில் விவாதிக்க வக்கற்றுபோய் சிலர் உங்கள் தளத்தில் அவதூறு செய்து மன நோயாளிகளைப்போன்று புலம்பித்திரிகிறார்கள். நீங்கள் இங்கு விவாதித்துக்கொண்டேஇன்னொரு பக்கம் அதை அனுமதிப்பது சரி அல்ல அவர்களுக்கு துணிவும்நேர்மையும் இருந்தால் இங்கு வந்து விவாதிக்கட்டும் அவர்கள் இவ்வாறுசெய்வதை தடுத்து இது சரி அல்ல நாம் விவாதிக்காமல் இப்படி முடிவு செய்யக் கூடாது என்பதை நீங்கள் தான் முறையாக சொல்லியிருக்கவேண்டும் நீங்கள் அதை செய்யாததால் தான் நான் இதை சுட்டிக்காடுகிறேன்.உடனடியாக அந்த தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அவதூறுகளை அழியுங்கள்அவர்களை இங்கு வரச்சொல்லுங்கள் இல்லை எனில் இங்கு விவாதிப்பதில்அர்த்தமே இல்லை !
October 24, 2007 8:49 AM

ஆசாத் said...

தமிழ்மணி,

நீன்க்கள் கம்யூனிச சமூகத்தை இப்போதுள்ள சமூகத்தோடு ஒப்பிடுவது தவறு. கம்யூனிச சமூகதில் மக்கள் தன்னிச்செய்யாக செயல்படும் திறனுடன் இருப்பார்கள். விதிமுறைகள் வகுக்க வேண்டிய சூழல் இருக்காது, மேலும் சோசலிச அமைப்பில் இருக்கும் விதிமுறைகளை கடைபிடுக்கும் தேவையும் இராது. அந்த சமூகத்தில் மக்களிடையே கருத்து வேறுபாடு என்பது இயற்கையை எதிர்த்த போராட்டத்தில் மட்டுமே இருக்கும், அதுவும் விஞ்ஞான பூர்வமானதாக இருக்கும்.வர்க்கம் மற்றும் கம்யூனிச கட்சியும் கூட இருக்காது, இந்த சமூகத்தில் மட்டுமே மக்கள் முழு சுதந்திரத்துடன் இருப்பார்கள். நீங்கள் கூறிய முதியவருக்கும் இளயவருக்கும் இருப்பது கருத்து வேறுபாடு அல்ல அது விருப்பம் சம்மந்தப்பட்டது.
October 25, 2007 2:02 AM

ஆசாத் said...

தோழர் ஜமாலன்,தமிழ்மணியின் கேள்விக்கு நான் சுறுக்கமான பதிலை தந்திருந்தேன், விரிவாக பதில் த்ந்தமைக்கு நன்றி

October 25, 2007 2:04 AM

ஆசாத் said...

தோழர் பாவெல்,நன்றி,உங்கள் கருத்தை நானும் வரவேற்கிறேன், ஒருபுறம் விவாதம் நடக்கையில் மறுபுறம் அவதூறுகளை தமிழ்மணி அனுமதிப்பதை கண்டிக்கிறேன்.
October 25, 2007 2:07 AM

ஆசாத் said...

தமிழ்மணி,விவாதம் என்ற போர்வையில் நீங்கள் செய்யும் அவதூறு பிரச்சாரத்தை வன்மையாக கண்டிக்கிறேன் இது விவாதிக்கும் முறையே இல்லை. இந்த அரைவேக்காட்டு தனமான கருத்துகளை அனுமதிப்பது விவாதத்தை அவமதிப்பதாகும். அவதூறு பரப்பும் கேழைகளே துணிவிருந்தால் என்னுடன் விவாதம் செய்ய தயாரா?
October 25, 2007 2:14 AM

ஆசாத் said...

செம்பியன் பிரிதி,
உங்களுக்கான எனது பதில்,

1.இந்தியா ஒரு தேசமே இல்லை, இது பூணுலால் கட்டப்பட்டது. இந்து-இந்தி-இந்தியா

2.ரஷ்ய பாணியில் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சிப் பாதை இந்தியாவில் சாத்தியமில்லை இந்தியா முழுமைக்கும் ஒரே நேரத்தில் புரட்சி ஏற்படுத்துவது சாத்தியமில்லை. நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை என்கிற வழிமுறைகளின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

3.மருதையன் ஒரு கம்யூனிச தோழர், அவர் பிறப்பால் பார்ப்பன சாதியை சேர்ந்தவர் என்பதால் அவர் மாறமுடியாது என்பது இயங்கியல் அடிப்படையில் தவறான கருத்தாகும். அவரை மதிப்பிடுவது அவருடைய செயல்பாடுகள்,எழுத்து போன்ற நடைமுறையில் மட்டுமே இருக்க வேண்டும்.

4.மூன்றாவது பதில் இத்ற்கும் பொருந்துமென எண்ணூகிறேன்.

5. வர்க்கப் போராட்டம் என்பது வர்கம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.உங்களின் ஆரோக்கியமான விவாதம் மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு வேறு விவாதம் நடப்பதால் சுறுக்கமான பதிலையே மேலே தந்துள்ளேன். உங்களை நேரில் சந்தித்து விவாதிக்கலாமா? உங்களை தொடர்பு கொள்ள முகவரியோ, தொலைபேசி எண்ணோ கொடுக்கவும்.

October 25, 2007 2:32 AM

தமிழ்மணி said...

என் பதில்
உங்கள் பதிலுக்கு நன்றி நண்பர் ஆசாத்,

//நீன்க்கள் கம்யூனிச சமூகத்தை இப்போதுள்ள சமூகத்தோடு ஒப்பிடுவது தவறு.//

நான் ஒப்பிடவில்லை. கம்யூனிஸ சமூகத்தில் என்ன விதிமுறைகள் இருக்கும்? அல்லது இருக்காது என்றுதான் கேட்கிறேன். சோசலிஸ சமுதாயத்தில் தோன்றிய விதிமுறைகள் கம்யூனிஸ சமுதாயத்திலும் இருக்குமா? அல்லது அங்கு புதி விதிமுறைகள் தோன்றுமா? கம்யூனிஸ அமைப்பில் விதிமுறைகளே இருக்காதா? இதுதான் கேட்பது.

//கம்யூனிச சமூகதில் மக்கள் தன்னிச்செய்யாக செயல்படும் திறனுடன் இருப்பார்கள். விதிமுறைகள் வகுக்க வேண்டிய சூழல் இருக்காது,மேலும் சோசலிச அமைப்பில் இருக்கும் விதிமுறைகளை கடைபிடுக்கும் தேவையும் இராது.//

அதாவது எல்லோருக்குமான பொதுவான விதிமுறைகள் எதுவுமே இருக்காது என்று கூறுகிறீர்கள். அவரவர் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவகையில் செய்வார்கள்.

//அந்த சமூகத்தில் மக்களிடையே கருத்து வேறுபாடு என்பது இயற்கையை எதிர்த்த போராட்டத்தில் மட்டுமே இருக்கும், அதுவும் விஞ்ஞான பூர்வமானதாக இருக்கும்.வர்க்கம் மற்றும் கம்யூனிச கட்சியும் கூட இருக்காது, இந்த சமூகத்தில் மட்டுமே மக்கள் முழு சுதந்திரத்துடன் இருப்பார்கள்.//

// நீங்கள் கூறிய முதியவருக்கும் இளயவருக்கும் இருப்பது கருத்து வேறுபாடு அல்ல அது விருப்பம் சம்மந்தப்பட்டது.//

அது விருப்பம் சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடுதான். ஆனால், சாலையில் எந்த வேகத்தில் கார்கள் செல்லமுடியும் என்ற பொது விஷயத்தை பாதிக்கிறதே?மேலே குறிப்பிட்டுள்ள பொது விதிமுறைகள் இருக்காது என்று கூறினீர்கள். ஆனால், அந்த பொது விதிமுறைகள் இல்லையென்றால் சாலையில் விபத்துகள் அதிகரிக்கவும், ஏன் போக்குவரத்தே இல்லாமல் போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறதே.உச்சகட்ட வேகம் என்பதை வரையறுக்கவேண்டிய தேவை இருக்கிறதே. அது எப்படி தானாக எல்லோருக்கும் ஒரே மாதிரியாக தோன்றும்?
நன்றி
October 25, 2007 8:18 AM

செம்பியன் பரிதி said...

நேரில் சந்தித்து விவாதிக்க நானும் ஆர்வமாகத் தான் இருக்கிறேன் நான் சென்னையில் இருக்கிறேன்நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ?உங்களை சந்திக்க வேண்டுமானால் எங்கே வர வேண்டும் ?உங்கள் முகவரியையும்அலை பேசி எண்னையும் தந்தால்நானே நேரில் வந்து சந்திக்கிறேன்.நன்றி ஆசாத். செம்பியன் பரிதி
October 25, 2007 11:18 PM

ஆசாத் said...

செம்பியன் பரிதி,

மகிழ்ச்சி, நான் சென்னையில் இல்லை, கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்.தேழர்கள் பேசுவார்கள்
முகவரி:
முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,(15-வது தெரு அருகில்),
அசோக் நகர்,
சென்னை - 600 083.

அலைபேசி : 9941175876, 23718706.

வரும் நேரத்தை தெரியப்படுத்தவும்.

October 26, 2007 12:23 AM

ஆசாத் said...

தமிழ்மணி,

//நான் ஒப்பிடவில்லை. கம்யூனிஸ சமூகத்தில் என்ன விதிமுறைகள் இருக்கும்? அல்லது இருக்காது என்றுதான் கேட்கிறேன். சோசலிஸ சமுதாயத்தில் தோன்றிய விதிமுறைகள் கம்யூனிஸ சமுதாயத்திலும் இருக்குமா? அல்லது அங்கு புதி விதிமுறைகள் தோன்றுமா? கம்யூனிஸ அமைப்பில் விதிமுறைகளே இருக்காதா? இதுதான் கேட்பது.//

நான் இதைத்தான் இவ்வளவு முறையாக கூறுகிறேன். கம்யூனிஸ சமூகத்தில் எந்த விதிமுறைகளும் இருக்காது. ஒரு கேள்வி: விதிமுறைகள் எதற்காக யார் உருவாக்குகிறார்கள்?

//அதாவது எல்லோருக்குமான பொதுவான விதிமுறைகள் எதுவுமே இருக்காது என்று கூறுகிறீர்கள். அவரவர் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவகையில் செய்வார்கள். //

//அது விருப்பம் சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடுதான். ஆனால், சாலையில் எந்த வேகத்தில் கார்கள் செல்லமுடியும் என்ற பொது விஷயத்தை பாதிக்கிறதே?மேலே குறிப்பிட்டுள்ள பொது விதிமுறைகள் இருக்காது என்று கூறினீர்கள். ஆனால், அந்த பொது விதிமுறைகள் இல்லையென்றால் சாலையில் விபத்துகள் அதிகரிக்கவும், ஏன் போக்குவரத்தே இல்லாமல் போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறதே.உச்சகட்ட வேகம் என்பதை வரையறுக்கவேண்டிய தேவை இருக்கிறதே. அது எப்படி தானாக எல்லோருக்கும் ஒரே மாதிரியாக தோன்றும்?//

ஆம் தன்னிச்செய்யாக செயல்படுவார்கள், அப்போது இருக்கும் மனிதர்கள் அறிவியலிலும், சிந்தனையிலும் பல மடங்கு முன்னேறி இருப்பார்கள். விதிமுறைகள் தேவையில்லை. உங்களுடைய விட்டில் எச்சில் துப்பாமல் இருக்க என்ன விதிமுறை இருக்கிறது? நீங்கள் உங்களுடைய நடு விட்டில் எச்சிலை துப்புவீர்களா?
October 26, 2007 12:38 AM

ஆசாத் said...

தமிழ்மணி,கருத்து என்றால் என்ன?
October 26, 2007 12:41 AM

தமிழ்மணி said...

//இதைத்தான் நானும் சொல்கிறேன், சோசலிச சமூகத்தில் மக்கள் பழகியிருப்பதால் விதிமுறைகள் தேவையில்லை. //

இல்லை. விதிமுறைகள் இருக்கின்றன. அவை இருக்கின்றன என்று அறியாத அளவுக்கு நீங்கள் அவற்றோடு ஒத்துழைக்கின்றீர்கள்.இதனைத்தான் "பழகியிருப்பதாக" நீங்கள் சொல்கிறீர்கள்.

//தமிழ்மணி நீங்க சின்ன வயசுல அதிகாரத்தால எச்சில் துப்பாமல் இருக்கலாம், பெரியவனான பிறகுமா அதிகாரம் பண்ணுராங்க, பாவங்க நீங்க. வர்க்கம் தோன்றிய காலத்தில் தான் விதிகள் தோன்றின, வர்க்கம் இல்லாத போது அதுவும் தேவையில்லை மேலும், அதிகாரம் இல்லாத மனிதக்குழு புராதண பொதுவுடமை சமூகத்தில் இருந்தது, குழுவாக வேட்டையாடி பகிர்ந்து கொண்டனர். பின் தங்கிய சமூகத்திலேயே இது சாத்தியப்பட்டிருந்தது, ஏன் முன்னேறிய சமூகத்தில் முடியாது? முன்னேக்கி பாருங்க. //

வேட்டையாடியதை பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதும் ஒரு விதி. சிந்தித்து பாருங்கள். புரியும்.

//அதிகாரம் என்பது ஒருவரை ஒடுக்கவே பயன்படுகிறது. ஒடுக்க வேண்டிய தேவையில்லாத சமூகத்தில் அது தேவையில்லை.உங்களிடன் தொலைநோக்கு பார்வை இல்லையென்றே கருத வேண்டியுள்ளது. ஒரு முன்னேறிய சமூகத்தை பற்றி விவாதிக்கும் போது இப்போதுள்ள சூழ்நிலையை ஒப்பிடுவது சரியா? நீங்க மறுத்தாலும் உங்க விவாதத்தில் அது நன்றாகவே தெரியுது.26. Oktober 2007 08:32//

இப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் எப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் விதிமுறைகள் இருக்கும். அவை இருக்கின்றன என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம். ஆனால் விதிமுறைகள் இருக்கின்றன.நன்றி
October 26, 2007 8:50 AM


ஆசாத் said...

தமிழ்மணி,

//இல்லை. விதிமுறைகள் இருக்கின்றன. அவை இருக்கின்றன என்று அறியாத அளவுக்கு நீங்கள் அவற்றோடு ஒத்துழைக்கின்றீர்கள்.இதனைத்தான் "பழகியிருப்பதாக" நீங்கள் சொல்கிறீர்கள்.//

நான் உதாரணத்தோடு கூறியும் தக்க காரணம் சொல்லாமல் மறுப்பது விவாதமல்ல. நீங்கள் உங்களுடைய முடிவை திணிக்கின்றீர்கள். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உங்களை வீட்டில் அதிகாரம் செய்வதில்லை ஆனாலும் நீங்கள் வீட்டில் எச்சில் துப்புவது கிடையாது, ஏன்? அது உங்கள் வீடு என்ற பொறுப்புணர்வு கிடையாதா? தினமும் பல் துலக்குவதும் விதிமுறைக்காகத்தானா? அது ஆரோக்கியம் சம்மந்தப்பட்டது இல்லையா? உங்கள் உடலின் மீதுள்ள பொறுப்பில்லையா?

//வேட்டையாடியதை பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதும் ஒரு விதி. சிந்தித்து பாருங்கள். புரியும்.//

பகிர்வது கூட ஒரு விதியா? அதில் அனைவரின் உழைப்பு இல்லையா? அது அவர்களின் உரிமையில்லையா? இதில் எங்கே விதிமுறை வந்தது? நீங்க் சொல்லும் விதிமுறை என்பது தான் என்ன? கம்யூனிசத்திற்கு தவிர்த்து உங்கள் மாற்று வழிதான் என்ன?

//இப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் எப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் விதிமுறைகள் இருக்கும். அவை இருக்கின்றன என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம். ஆனால் விதிமுறைகள் இருக்கின்றன.//

அப்ப விதிமுறை இல்லாம வாழ முடியாது? இதுவரை (புராதண பொதுவுடைமை சமூகத்தில்) விதிமுறை இருந்தது என்று சொல்லும் போது அதை ஆதாரத்துடன் சொல்ல வேண்டும், எதிர்காலத்திலும் விதிமுறை இருக்கும் என்று எந்த அடிப்படையில் கூற முடியும்?விவாதிக்கச் சொன்னா நீங்க உங்க முடிவை திணிக்க முயற்ச்சிக்கைறிங்க.
நன்றி.

25 comments:

Anonymous said...

எனக்கும் சில கேள்விகள் உள்ளது

1,நீங்கள் இந்தியாவை எப்படி பார்க்கிறீர்கள் ?

2,இந்தியாவில் எப்படி புரட்சி செய்வீர்கள் ?

3,மருதையன் பார்ப்பன கண்ணோட்டத்தில் இல்லை என்பதை எப்படி நம்புவது ?

4,உங்கள் அமைப்பிலுள்ள முக்கிய நபர்கள் அனைவருமே பார்ப்பனர்களாக
இருக்கும் போது நீங்கள் தமிழர்களின் விடுதலையை பற்றி பேசுவதை எப்படி நம்புவது ?

5,தமிழ் தேசிய இனம் பற்றி உங்கள் கருத்து என்ன ?


என்னுடைய கேள்விகள்
உங்கள் மனதை புன்படுத்தும் நோக்கமுடையன அல்ல
எனது அய்யங்களை தெளிவு படுத்திக்கொள்ளவே இவற்றை முன் வைத்துள்ளேன் இன்னும் பல
கேள்விகள் உள்ளது தொடர்ந்து விவாதிப்போம்.


நன்றி

செம்பியன் பரிதி

பாவெல் said...

தமிழ்மணி

கம்யூனிசத்தை தர்க்க அடிப்படையில் விவாதிக்க வக்கற்று
போய் சிலர் உங்கள் தளத்தில் அவதூறு செய்து மன நோயாளிகளைப்
போன்று புலம்பித்திரிகிறார்கள். நீங்கள் இங்கு விவாதித்துக்கொண்டே
இன்னொரு பக்கம் அதை அனுமதிப்பது சரி அல்ல அவர்களுக்கு துணிவும்
நேர்மையும் இருந்தால் இங்கு வந்து விவாதிக்கட்டும் அவர்கள் இவ்வாறு
செய்வதை தடுத்து இது சரி அல்ல நாம் விவாதிக்காமல் இப்படி முடிவு
செய்யக் கூடாது என்பதை நீங்கள் தான் முறையாக சொல்லியிருக்க
வேண்டும் நீங்கள் அதை செய்யாததால் தான் நான் இதை சுட்டிக்காடுகிறேன்.
உடனடியாக அந்த தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அவதூறுகளை அழியுங்கள்
அவர்களை இங்கு வரச்சொல்லுங்கள் இல்லை எனில் இங்கு விவாதிப்பதில்
அர்த்தமே இல்லை !

said...

தமிழ்மணி,

நீன்க்கள் கம்யூனிச சமூகத்தை இப்போதுள்ள சமூகத்தோடு ஒப்பிடுவது தவறு. கம்யூனிச சமூகதில் மக்கள் தன்னிச்செய்யாக செயல்படும் திறனுடன் இருப்பார்கள். விதிமுறைகள் வகுக்க வேண்டிய சூழல் இருக்காது, மேலும் சோசலிச அமைப்பில் இருக்கும் விதிமுறைகளை கடைபிடுக்கும் தேவையும் இராது. அந்த சமூகத்தில் மக்களிடையே கருத்து வேறுபாடு என்பது இயற்கையை எதிர்த்த போராட்டத்தில் மட்டுமே இருக்கும், அதுவும் விஞ்ஞான பூர்வமானதாக இருக்கும்.வர்க்கம் மற்றும் கம்யூனிச கட்சியும் கூட இருக்காது, இந்த சமூகத்தில் மட்டுமே மக்கள் முழு சுதந்திரத்துடன் இருப்பார்கள். நீங்கள் கூறிய முதியவருக்கும் இளயவருக்கும் இருப்பது கருத்து வேறுபாடு அல்ல அது விருப்பம் சம்மந்தப்பட்டது.

said...

தோழர் ஜமாலன்,

தமிழ்மணியின் கேள்விக்கு நான் சுறுக்கமான பதிலை தந்திருந்தேன், விரிவாக பதில் த்ந்தமைக்கு நன்றி

said...

தோழர் பாவெல்,

நன்றி,உங்கள் கருத்தை நானும் வரவேற்கிறேன், ஒருபுறம் விவாதம் நடக்கையில் மறுபுறம் அவதூறுகளை தமிழ்மணி அனுமதிப்பதை கண்டிக்கிறேன்.

said...

தமிழ்மணி,

விவாதம் என்ற போர்வையில் நீங்கள் செய்யும் அவதூறு பிரச்சாரத்தை வன்மையாக கண்டிக்கிறேன் இது விவாதிக்கும் முறையே இல்லை. இந்த அரைவேக்காட்டு தனமான கருத்துகளை அனுமதிப்பது விவாதத்தை அவமதிப்பதாகும். அவதூறு பரப்பும் கேழைகளே துணிவிருந்தால் என்னுடன் விவாதம் செய்ய தயாரா?

said...

செம்பியன் பிரிதி,

உங்களுக்கான எனது பதில்,

1.இந்தியா ஒரு தேசமே இல்லை, இது பூணுலால் கட்டப்பட்டது. இந்து-இந்தி-இந்தியா

2.ரஷ்ய பாணியில் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சிப் பாதை இந்தியாவில் சாத்தியமில்லை
இந்தியா முழுமைக்கும் ஒரே நேரத்தில் புரட்சி ஏற்படுத்துவது சாத்தியமில்லை. நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை என்கிற வழிமுறைகளின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

3.மருதையன் ஒரு கம்யூனிச தோழர், அவர் பிறப்பால் பார்ப்பன சாதியை சேர்ந்தவர் என்பதால் அவர் மாறமுடியாது என்பது இயங்கியல் அடிப்படையில் தவறான கருத்தாகும். அவரை மதிப்பிடுவது அவருடைய செயல்பாடுகள்,எழுத்து போன்ற நடைமுறையில் மட்டுமே இருக்க வேண்டும்.

4.மூன்றாவது பதில் இத்ற்கும் பொருந்துமென எண்ணூகிறேன்.

5. வர்க்கப் போராட்டம் என்பது வர்கம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

உங்களின் ஆரோக்கியமான விவாதம் மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு வேறு விவாதம் நடப்பதால் சுறுக்கமான பதிலையே மேலே தந்துள்ளேன். உங்களை நேரில் சந்தித்து விவாதிக்கலாமா? உங்களை தொடர்பு கொள்ள முகவரியோ, தொலைபேசி எண்ணோ கொடுக்கவும்.

தமிழ்மணி said...

என் பதில்
உங்கள் பதிலுக்கு நன்றி நண்பர் ஆசாத்,

//நீன்க்கள் கம்யூனிச சமூகத்தை இப்போதுள்ள சமூகத்தோடு ஒப்பிடுவது தவறு.//

நான் ஒப்பிடவில்லை. கம்யூனிஸ சமூகத்தில் என்ன விதிமுறைகள் இருக்கும்? அல்லது இருக்காது என்றுதான் கேட்கிறேன். சோசலிஸ சமுதாயத்தில் தோன்றிய விதிமுறைகள் கம்யூனிஸ சமுதாயத்திலும் இருக்குமா? அல்லது அங்கு புதி விதிமுறைகள் தோன்றுமா? கம்யூனிஸ அமைப்பில் விதிமுறைகளே இருக்காதா? இதுதான் கேட்பது.

//
கம்யூனிச சமூகதில் மக்கள் தன்னிச்செய்யாக செயல்படும் திறனுடன் இருப்பார்கள். விதிமுறைகள் வகுக்க வேண்டிய சூழல் இருக்காது,
மேலும் சோசலிச அமைப்பில் இருக்கும் விதிமுறைகளை கடைபிடுக்கும் தேவையும் இராது.
//

அதாவது எல்லோருக்குமான பொதுவான விதிமுறைகள் எதுவுமே இருக்காது என்று கூறுகிறீர்கள். அவரவர் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவகையில் செய்வார்கள்.

// அந்த சமூகத்தில் மக்களிடையே கருத்து வேறுபாடு என்பது இயற்கையை எதிர்த்த போராட்டத்தில் மட்டுமே இருக்கும், அதுவும் விஞ்ஞான பூர்வமானதாக இருக்கும்.வர்க்கம் மற்றும் கம்யூனிச கட்சியும் கூட இருக்காது, இந்த சமூகத்தில் மட்டுமே மக்கள் முழு சுதந்திரத்துடன் இருப்பார்கள்.
//

// நீங்கள் கூறிய முதியவருக்கும் இளயவருக்கும் இருப்பது கருத்து வேறுபாடு அல்ல அது விருப்பம் சம்மந்தப்பட்டது.
//
அது விருப்பம் சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடுதான். ஆனால், சாலையில் எந்த வேகத்தில் கார்கள் செல்லமுடியும் என்ற பொது விஷயத்தை பாதிக்கிறதே?

மேலே குறிப்பிட்டுள்ள பொது விதிமுறைகள் இருக்காது என்று கூறினீர்கள். ஆனால், அந்த பொது விதிமுறைகள் இல்லையென்றால் சாலையில் விபத்துகள் அதிகரிக்கவும், ஏன் போக்குவரத்தே இல்லாமல் போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறதே.

உச்சகட்ட வேகம் என்பதை வரையறுக்கவேண்டிய தேவை இருக்கிறதே.

அது எப்படி தானாக எல்லோருக்கும் ஒரே மாதிரியாக தோன்றும்?

நன்றி

Anonymous said...

நேரில் சந்தித்து விவாதிக்க நானும்
ஆர்வமாகத் தான் இருக்கிறேன்
நான் சென்னையில் இருக்கிறேன்
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ?

உங்களை சந்திக்க வேண்டுமானால்
எங்கே வர வேண்டும் ?

உங்கள் முகவரியையும்
அலை பேசி எண்னையும் தந்தால்
நானே நேரில் வந்து சந்திக்கிறேன்.

நன்றி ஆசாத்.

செம்பியன் பரிதி

said...

//நான் ஒப்பிடவில்லை. கம்யூனிஸ சமூகத்தில் என்ன விதிமுறைகள் இருக்கும்? அல்லது இருக்காது என்றுதான் கேட்கிறேன். சோசலிஸ சமுதாயத்தில் தோன்றிய விதிமுறைகள் கம்யூனிஸ சமுதாயத்திலும் இருக்குமா? அல்லது அங்கு புதி விதிமுறைகள் தோன்றுமா? கம்யூனிஸ அமைப்பில் விதிமுறைகளே இருக்காதா? இதுதான் கேட்பது.//

நான் இதைத்தான் இவ்வளவு முறையாக கூறுகிறேன். கம்யூனிஸ சமூகத்தில் எந்த விதிமுறைகளும் இருக்காது. ஒரு கேள்வி: விதிமுறைகள் எதற்காக யார் உருவாக்குகிறார்கள்?

//அதாவது எல்லோருக்குமான பொதுவான விதிமுறைகள் எதுவுமே இருக்காது என்று கூறுகிறீர்கள். அவரவர் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவகையில் செய்வார்கள். //


//அது விருப்பம் சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடுதான். ஆனால், சாலையில் எந்த வேகத்தில் கார்கள் செல்லமுடியும் என்ற பொது விஷயத்தை பாதிக்கிறதே?

மேலே குறிப்பிட்டுள்ள பொது விதிமுறைகள் இருக்காது என்று கூறினீர்கள். ஆனால், அந்த பொது விதிமுறைகள் இல்லையென்றால் சாலையில் விபத்துகள் அதிகரிக்கவும், ஏன் போக்குவரத்தே இல்லாமல் போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறதே.

உச்சகட்ட வேகம் என்பதை வரையறுக்கவேண்டிய தேவை இருக்கிறதே.

அது எப்படி தானாக எல்லோருக்கும் ஒரே மாதிரியாக தோன்றும்?//

ஆம் தன்னிச்செய்யாக செயல்படுவார்கள், அப்போது இருக்கும் மனிதர்கள் அறிவியலிலும், சிந்தனையிலும் பல மடங்கு முன்னேறி இருப்பார்கள். விதிமுறைகள் தேவையில்லை. உங்களுடைய விட்டில் எச்சில் துப்பாமல் இருக்க என்ன விதிமுறை இருக்கிறது? நீங்கள் உங்களுடைய நடு விட்டில் எச்சிலை துப்புவீர்களா?

said...

தமிழ்மணி,

கருத்து என்றால் என்ன?

தமிழ்மணி said...

என் பதில்

வயதானவர் இளைஞர், பாட்டியம்மாள், சிறுகுழந்தை எல்லோருக்கும் ஒரே நேரத்தில் இந்த ரோட்டில் 60 கிலோமீட்டர்தான் அதிகபட்ச வேகம் என்று பளிச்சென்று தெரியுமா?
அது எப்படி?


//கருத்து என்றால் என்ன?//


ஒவ்வொரு தனிம்னிதனையும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டுவது

தமிழ்மணி said...

//உங்களுடைய விட்டில் எச்சில் துப்பாமல் இருக்க என்ன விதிமுறை இருக்கிறது? நீங்கள் உங்களுடைய நடு விட்டில் எச்சிலை துப்புவீர்களா?//

இது சின்னவயதிலிருந்தே வீட்டுக்குள் இருக்கும் அதிகாரத்தில் உள்ள பெற்றோர், முதியவர்கள் அடித்தும், சொல்லியும் உருவாகும் விதி.

இது எல்லோருக்கும் உபயோகமான விதி என்று வீட்டுக்குள் அதிகாரத்தில் உள்ள பெற்றோர் சொல்லி வருவது.
குழந்தைகள் அந்த விதியை பழகி அந்த விதியை தன்னுடையதாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

விதி என்று ஒன்று இருக்கிறது. அந்த விதியை நிறுவதற்கும், தொடர்ந்து அமல் படுத்துவதற்கும் அதிகாரமுள்ள ஒரு குழு இருக்கத்தான் செய்கிறது.
நீங்கள் சொல்கின்ற பழங்குடி சமுதாயத்திலும் கூட அதிகாரம், தலைவர் என்று இருந்தது.

அதிகாரம் இல்லாத மனிதக்குழு உலகத்தில் இருந்ததே இல்லை.

said...

//வயதானவர் இளைஞர், பாட்டியம்மாள், சிறுகுழந்தை எல்லோருக்கும் ஒரே நேரத்தில் இந்த ரோட்டில் 60 கிலோமீட்டர்தான் அதிகபட்ச வேகம் என்று பளிச்சென்று தெரியுமா?
அது எப்படி?//

வயதானவர் இளைஞர், பாட்டியம்மாள், சிறுகுழந்தை எல்லோருக்கும் வீட்டில் எச்சில் துப்புவது கூடாது என்று தெரிவதைப்போல. அந்த சமூகத்தில் அனைவரும் மிகுந்த சமூக அக்கறையுடன் இருப்பதால் உயர்ந்த மனித பண்புடன் இருப்பார்கள். வேகத்தை பொருத்தவரை , இதே போன்ற சாலைகள் தான் அப்போதும் இருக்குமா? அனைவரும் பொருப்புடன் இருக்கையில் விதிமுறைகளின் அவசியம் என்ன?


//ஒவ்வொரு தனிம்னிதனையும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டுவது //

அப்படின்னா கருத்து வேறுபாடுன்னா என்ன?

said...

//இது சின்னவயதிலிருந்தே வீட்டுக்குள் இருக்கும் அதிகாரத்தில் உள்ள பெற்றோர், முதியவர்கள் அடித்தும், சொல்லியும் உருவாகும் விதி.

இது எல்லோருக்கும் உபயோகமான விதி என்று வீட்டுக்குள் அதிகாரத்தில் உள்ள பெற்றோர் சொல்லி வருவது.
குழந்தைகள் அந்த விதியை பழகி அந்த விதியை தன்னுடையதாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

விதி என்று ஒன்று இருக்கிறது. அந்த விதியை நிறுவதற்கும், தொடர்ந்து அமல் படுத்துவதற்கும் அதிகாரமுள்ள ஒரு குழு இருக்கத்தான் செய்கிறது.
நீங்கள் சொல்கின்ற பழங்குடி சமுதாயத்திலும் கூட அதிகாரம், தலைவர் என்று இருந்தது.

அதிகாரம் இல்லாத மனிதக்குழு உலகத்தில் இருந்ததே இல்லை. //

இதைத்தான் நானும் சொல்கிறேன், சோசலிச சமூகத்தில் மக்கள் பழகியிருப்பதால் விதிமுறைகள் தேவையில்லை.

தமிழ்மணி நீங்க சின்ன வயசுல அதிகாரத்தால எச்சில் துப்பாமல் இருக்கலாம், பெரியவனான பிறகுமா அதிகாரம் பண்ணுராங்க, பாவங்க நீங்க.

வர்க்கம் தோன்றிய காலத்தில் தான் விதிகள் தோன்றின, வர்க்கம் இல்லாத போது அதுவும் தேவையில்லை மேலும், அதிகாரம் இல்லாத மனிதக்குழு புராதண பொதுவுடமை சமூகத்தில் இருந்தது, குழுவாக வேட்டையாடி பகிர்ந்து கொண்டனர். பின் தங்கிய சமூகத்திலேயே இது சாத்தியப்பட்டிருந்தது, ஏன் முன்னேறிய சமூகத்தில் முடியாது? முன்னேக்கி பாருங்க.

அதிகாரம் என்பது ஒருவரை ஒடுக்கவே பயன்படுகிறது. ஒடுக்க வேண்டிய தேவையில்லாத சமூகத்தில் அது தேவையில்லை.

உங்களிடன் தொலைநோக்கு பார்வை இல்லையென்றே கருத வேண்டியுள்ளது. ஒரு முன்னேறிய சமூகத்தை பற்றி விவாதிக்கும் போது இப்போதுள்ள சூழ்நிலையை ஒப்பிடுவது சரியா? நீங்க மறுத்தாலும் உங்க விவாதத்தில் அது நன்றாகவே தெரியுது.

தமிழ்மணி said...

//இதைத்தான் நானும் சொல்கிறேன், சோசலிச சமூகத்தில் மக்கள் பழகியிருப்பதால் விதிமுறைகள் தேவையில்லை.
//

இல்லை. விதிமுறைகள் இருக்கின்றன. அவை இருக்கின்றன என்று அறியாத அளவுக்கு நீங்கள் அவற்றோடு ஒத்துழைக்கின்றீர்கள்.

இதனைத்தான் "பழகியிருப்பதாக" நீங்கள் சொல்கிறீர்கள்.

//
தமிழ்மணி நீங்க சின்ன வயசுல அதிகாரத்தால எச்சில் துப்பாமல் இருக்கலாம், பெரியவனான பிறகுமா அதிகாரம் பண்ணுராங்க, பாவங்க நீங்க.

வர்க்கம் தோன்றிய காலத்தில் தான் விதிகள் தோன்றின, வர்க்கம் இல்லாத போது அதுவும் தேவையில்லை மேலும், அதிகாரம் இல்லாத மனிதக்குழு புராதண பொதுவுடமை சமூகத்தில் இருந்தது, குழுவாக வேட்டையாடி பகிர்ந்து கொண்டனர். பின் தங்கிய சமூகத்திலேயே இது சாத்தியப்பட்டிருந்தது, ஏன் முன்னேறிய சமூகத்தில் முடியாது? முன்னேக்கி பாருங்க.
//

வேட்டையாடியதை பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதும் ஒரு விதி. சிந்தித்து பாருங்கள். புரியும்.

//
அதிகாரம் என்பது ஒருவரை ஒடுக்கவே பயன்படுகிறது. ஒடுக்க வேண்டிய தேவையில்லாத சமூகத்தில் அது தேவையில்லை.

உங்களிடன் தொலைநோக்கு பார்வை இல்லையென்றே கருத வேண்டியுள்ளது. ஒரு முன்னேறிய சமூகத்தை பற்றி விவாதிக்கும் போது இப்போதுள்ள சூழ்நிலையை ஒப்பிடுவது சரியா? நீங்க மறுத்தாலும் உங்க விவாதத்தில் அது நன்றாகவே தெரியுது.

26. Oktober 2007 08:32
//

இப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் எப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் விதிமுறைகள் இருக்கும். அவை இருக்கின்றன என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம். ஆனால் விதிமுறைகள் இருக்கின்றன.

நன்றி

said...

தமிழ்மணி,

//இல்லை. விதிமுறைகள் இருக்கின்றன. அவை இருக்கின்றன என்று அறியாத அளவுக்கு நீங்கள் அவற்றோடு ஒத்துழைக்கின்றீர்கள்.

இதனைத்தான் "பழகியிருப்பதாக" நீங்கள் சொல்கிறீர்கள்.//

நான் உதாரணத்தோடு கூறியும் தக்க காரணம் சொல்லாமல் மறுப்பது விவாதமல்ல. நீங்கள் உங்களுடைய முடிவை திணிக்கின்றீர்கள். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உங்களை வீட்டில் அதிகாரம் செய்வதில்லை ஆனாலும் நீங்கள் வீட்டில் எச்சில் துப்புவது கிடையாது, ஏன்? அது உங்கள் வீடு என்ற பொறுப்புணர்வு கிடையாதா? தினமும் பல் துலக்குவதும் விதிமுறைக்காகத்தானா? அது ஆரோக்கியம் சம்மந்தப்பட்டது இல்லையா? உங்கள் உடலின் மீதுள்ள பொறுப்பில்லையா?

//வேட்டையாடியதை பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதும் ஒரு விதி. சிந்தித்து பாருங்கள். புரியும்.//

பகிர்வது கூட ஒரு விதியா? அதில் அனைவரின் உழைப்பு இல்லையா? அது அவர்களின் உரிமையில்லையா? இதில் எங்கே விதிமுறை வந்தது? நீங்க் சொல்லும் விதிமுறை என்பது தான் என்ன?

கம்யூனிசத்திற்கு தவிர்த்து உங்கள் மாற்று வழிதான் என்ன?

//இப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் எப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் விதிமுறைகள் இருக்கும். அவை இருக்கின்றன என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம். ஆனால் விதிமுறைகள் இருக்கின்றன.//

அப்ப விதிமுறை இல்லாம வாழ முடியாது? இதுவரை (புராதண பொதுவுடைமை சமூகத்தில்) விதிமுறை இருந்தது என்று சொல்லும் போது அதை ஆதாரத்துடன் சொல்ல வேண்டும், எதிர்காலத்திலும் விதிமுறை இருக்கும் என்று எந்த அடிப்படையில் கூற முடியும்?
விவாதிக்கச் சொன்னா நீங்க உங்க முடிவை திணிக்க முயற்ச்சிக்கைறிங்க.

நன்றி.

said...

செம்பியன் பரிதி,

மகிழ்ச்சி, நான் சென்னையில் இல்லை, கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்.தேழர்கள் பேசுவார்கள்
முகவரி:
முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,(15-வது தெரு அருகில்),
அசோக் நகர்,
சென்னை - 600 083.

அலைபேசி : 9941175876, 23718706.

வரும் நேரத்தை தெரியப்படுத்தவும்.

தமிழ்மணி said...

//
நான் உதாரணத்தோடு கூறியும் தக்க காரணம் சொல்லாமல் மறுப்பது விவாதமல்ல. நீங்கள் உங்களுடைய முடிவை திணிக்கின்றீர்கள். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உங்களை வீட்டில் அதிகாரம் செய்வதில்லை ஆனாலும் நீங்கள் வீட்டில் எச்சில் துப்புவது கிடையாது, ஏன்? அது உங்கள் வீடு என்ற பொறுப்புணர்வு கிடையாதா? தினமும் பல் துலக்குவதும் விதிமுறைக்காகத்தானா? அது ஆரோக்கியம் சம்மந்தப்பட்டது இல்லையா? உங்கள் உடலின் மீதுள்ள பொறுப்பில்லையா?
//
எச்சில் துப்பக்கூடாது என்பது விதி என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.
அது நம்முடையதாக நாமே ஏற்றுக்கொண்டபின்னால் அது விதி இல்லை என்று சொல்கிறீர்கள்.
அது தவறு என்று சொல்கிறேன். விதி இருக்கிறது. அத்தோடு முழுமையாக ஒத்துழைக்கிறீர்கள். ஒரு விதியோடு முழுமையாக ஒத்துழைத்தால் அது விதி இல்லை என்று ஆகிவிடுமா?
பொறுப்புணர்வு, ஆரோக்கியம் ஆகியவை அந்த விதியை ஏற்றுக்கொள்ள பெற்றோரால் கொடுக்கப்படும் காரணங்கள். அந்த காரணங்களையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். அவ்வளவுதான்.
விதி இருக்கிறது. அத்தோடு ஒத்துழைக்கிறீர்கள். அவ்வளவுதான்.
ஆனால் எல்லாவிதிகளுமே மாற்றமடையும். இந்த எச்சில் துப்புவது கூடத்தான். மிகவும் கடுமையான சூழ்நிலையில் "பரவாயில்லை துப்பு, பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்றும் அந்த விதி மாற்றமடையலாம்.
//
பகிர்வது கூட ஒரு விதியா? அதில் அனைவரின் உழைப்பு இல்லையா? அது அவர்களின் உரிமையில்லையா? இதில் எங்கே விதிமுறை வந்தது? நீங்க் சொல்லும் விதிமுறை என்பது தான் என்ன?
//

பகிர்வதும் ஒரு விதிதான். அதற்கான காரணங்கள் பல கூறுகிறீர்கள். உழைப்பு, உரிமை ஆகியவை.

யார் வேட்டையாடினாலும் எல்லோரும் பகிர்ந்து உண்ணவேண்டும் என்பது ஒரு விதி. அவரவர் வேட்டையாடியதை அவரவரே உண்டுகொள்ளலாம் என்பதும் ஒரு விதி. இரண்டுக்கும் காரணங்கள் சொல்லலாம். ஆனால், இவைகள் விதிகளே.

//அப்ப விதிமுறை இல்லாம வாழ முடியாது? இதுவரை (புராதண பொதுவுடைமை சமூகத்தில்) விதிமுறை இருந்தது என்று சொல்லும் போது அதை ஆதாரத்துடன் சொல்ல வேண்டும், எதிர்காலத்திலும் விதிமுறை இருக்கும் என்று எந்த அடிப்படையில் கூற முடியும்?
விவாதிக்கச் சொன்னா நீங்க உங்க முடிவை திணிக்க முயற்ச்சிக்கைறிங்க.
//
விதிமுறைகள் இல்லாமல் ஒருவருக்கும் மேற்பட்ட குழு வாழ முடியாது. புராதன பொதுவுடமை சமுதாயம் என்று ஒன்றும் இல்லை. எல்லா சமுதாயங்களிலும் விதிமுறைகள் உண்டு. விதிமுறைகளை தாண்டுபவர்கள் அந்த புராதன சமுதாயங்களிலும், இன்றைய பழங்குடி சமுதாயங்களிலும் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள்.

உதாரணமாக டாபூ taboo என்பது பழங்குடி சமுதாயங்களில் உண்டு. இதனை ஆழமாக ஆராய்ச்சிசெய்துள்ளார்கள். டாபூ என்பது எது அந்த சமூகம் ஒப்புக்கொள்ளும் ந்டைமுறை, எது ஒப்புக்கொள்ளாத நடைமுறை என்பதை விவரிக்கிறது.

நன்றி

K.R.அதியமான் said...

some questions :

1. all former 'communist' or socialist states like USSR, China, Vietnam started intially with genuine idealists and purists like you. but they failed to move toward true communism and failed.
how are sure that, when people like you succeed (if at all) in bringing in a revolution here in future, it too will not subsequnetly be diluted and corrupted ? can you change the true nature of people (esp our corrupt Indians) ?

2. and what are you all going to do with these 'polli' communists of CPM, CPI after the revolution ?
send them to gulags ? and how will you identify the new pollis who will surely bloom within your groups ? and what will you do with them ?

sorry for my engish typing as my tamil speed is very slow. and hope you may not call me a petit bouregehuse (spelling !!)as some of your comrades do !!!

தமிழ்மணி said...

புராதன சமுதாயமாக இருந்தாலும் விதிமுறைகள் இருக்கின்றன.

விதிமுறைகள் இல்லாத புராதன் சமுதாயம் பற்றிய எந்த மானுடவியலாளராவது, அறிவியலறிஞராவது எழுதியபுத்தகத்தை இங்கே சுட்டுங்கள்.

நன்றி

said...

தமிழ்மணி,

புராதன பொதுவுடைமை சமுதாயத்தை பற்றி அறிய நீங்கள் மார்க்ஸ் அவர்களின் ஆய்வு கட்டுரைகளை படிக்கலாம். மேலும் நீங்கள் விவாததை வேறு திசையை நோக்கி நகர்த்துவதால் இந்த விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். நீங்கள் இப்போதுள்ள சமூக அவலங்களை நீக்க முயல்வதாக தெரியவில்லை.

தமிழ்மணி said...

//புராதன பொதுவுடைமை சமுதாயத்தை பற்றி அறிய நீங்கள் மார்க்ஸ் அவர்களின் ஆய்வு கட்டுரைகளை படிக்கலாம். மேலும் நீங்கள் விவாததை வேறு திசையை நோக்கி நகர்த்துவதால் இந்த விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். நீங்கள் இப்போதுள்ள சமூக அவலங்களை நீக்க முயல்வதாக தெரியவில்லை.
/

பதிலுக்கு நன்றி

புராதன பொதுவுடமை சமுதாயம் பற்றி மார்கஸ் 18ஆம் நூற்றாண்டில் எழுதிய புத்தகங்களின் பெயர்களையாவது சொல்லுங்கள்.

அவை இன்னமும் மிகச்சரியானவை என்று 21ஆம் நூற்றாண்டு மானுடவியலாளர்கள் சொல்கிறார்களா என்பதையும் சொல்லுங்கள்.

இப்போதுள்ள சமூக அவலங்களை நீக்கத்தான் தாங்கள் உழைப்பதாக எல்லா அரசியல் கட்சிகளும் சொல்கின்றன. அதற்கென்ன இப்போது.

இந்த விவாதம் கம்யூனிஸம் பற்றியது. அதனை விவாதிப்போம்

அசுரன் said...

//3,மருதையன் பார்ப்பன கண்ணோட்டத்தில் இல்லை என்பதை எப்படி நம்புவது ?//

Because, MaKaEeKa runs not by மருதையன் கண்ணோட்டத்தில்.

Marudhayan represents MaKaEeKa because his கண்ணோட்ட is in line with MaKaEeKa கண்ணோட்ட.

And Communist parties are not driven by Individuals. Their each every member has liverage on the party decision.

So it is not மருதையன் கண்ணோட்ட matters but MaKaEeKa கண்ணோட்ட that matters.

Let us know if you find any MaKaEeKa's பார்ப்பன கண்ணோட்ட, We can discuss.


I will not entertain no other discussions in this aspect except the above mentioned last lines(about MaKaEeKa கண்ணோட்ட).

Asuran

Unknown said...

செவ்வணக்கம் தோழர்.
கம்யூனிச சமுதாயத்தில் குடும்ப நிலை எப்படி இருக்கும்? அல்லது கட்டுப்பாடற்ற உறவு நிலைகளை ஏற்படுத்த சோசலிச சமுதாயத்தில் என்ன மாதிரியான ஒழுங்குகள் ஏற்படுத்தப்படும்?